அன்று இளையராஜா.. இன்று யுவன் சங்கர் ராஜா.. ஒரே பாடலில் நிகழ்ந்த சாதனை
நடிகர் சந்தானம் படத்தின் பாடல் ஒன்று 5 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெறும் பேர் வச்சாலும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
அதாவது கமல் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை பாடிய மலேசியா வாசுதேவன், ஜானகி ஆகியோர்களின் குரலை மாற்றாமல் யுவன் சங்கர் ராஜா இதனை ரீமேக் செய்துள்ளார். இந்த பாடல் இணையதளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் பாட்டிற்கு ஒரிஜினலாக மெட்டமைத்த இளையராஜாவின் கைவண்ணத்தை இன்றளவும் கேட்டு சிலாகித்து வரும் நிலையில் தற்போது யுவனின் பீட்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.