வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’..நூற்றாண்டு காணும் சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

kamalhassan sankarayya 100yrs communist
By Irumporai Jul 14, 2021 05:42 PM GMT
Report

வறுமையின் நிறம் சிவப்பு என இருக்கும் நிலையில் வறுமையின் நிறம் சிவப்பு அல்ல என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

பழம்பெரும் கட்சியின் சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் என்.சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில் கமல்ஹாசன் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார்.