சங்கரய்யா மறைவு: அரசு மரியாதையுடன் பிரியாவிடை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

By Jiyath Nov 15, 2023 08:11 AM GMT
Report

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சங்கரய்யா மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என். சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

சங்கரய்யா மறைவு: அரசு மரியாதையுடன் பிரியாவிடை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! | Sankaraiya Cremated With State Honours Stalin

இந்நிலையில் சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியில் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்

மேலும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்குச் செவ்வணக்கம்!

சங்கரய்யா மறைவு: அரசு மரியாதையுடன் பிரியாவிடை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! | Sankaraiya Cremated With State Honours Stalin

தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய சங்கரய்யாவுக்கு, தமிழக அரசு "தகைசால் தமிழர் விருது" வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.