‘’ சீக்கிரம் குணமாகி வாங்க தோழர் சங்கரய்யா ‘’ - முதலமைச்சர் ஸ்டாலின்

covid19 ministerstalin sankaraiah
By Irumporai Jan 09, 2022 03:27 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து,அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன்.

தோழர் அவர்களைக் கவனித்துக் கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.