நடிகை கீர்த்தி சுரேஷை முந்திய CSKயின் சஞ்சு சாம்சன்

Keerthy Suresh Chennai Super Kings Sanju Samson T20 World Cup 2026
By Sivaraj Apr 14, 2026 12:36 PM GMT
Report

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட கேரள பிரபலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

சஞ்சு சாம்சன்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 115 ரன் விளாசினார். 

Sanju Samson

முன்னதாக, உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் சஞ்சு சாம்சன்.

உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு முன்பு சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 1.4 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 1.9 கோடியாக உள்ளது. 

Keerthy Suresh 

கீர்த்தி சுரேஷை முந்தி

இதன்மூலம் சஞ்சு சாம்சன், இன்ஸ்டாகிராமில் நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி, அதிக ஃபாலோவர்ஸை கொண்ட கேரளத்தைச் சேர்ந்த பிரபலம் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

Sanju Samson

கீர்த்தி சுரேஷின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை தற்போது வரை 18.8 மில்லியன் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Keerthy Suresh