இனி ரிஷப் பண்டின் எதிர்காலம் அவ்வளவுதானா? - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் எதிர்கால கிரிக்கெட்டிற்கு ஐபிஎல் தொடர் எதிராக அமைந்து விடுமோ என்ற கேள்வியெழுந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் முதல் போட்டியில் விளையாடியுள்ள நிலையில் சில எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இதில் முன்னணி அணிகள் தோல்விகள் ரசிகர்களை ஒருபுறம் சோகத்தில் ஆழ்த்த, மறுபுறம் ஐபிஎல் தொடர் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்டின் எதிர்காலத்திற்கு எதிராக அமைந்து விடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி 7 வெளிநாட்டு வீரர்களை விலைக்கு வாங்கிய நிலையில் ஆன்ரிக் நார்ட்ஜே, மிட்சல் மார்ஷ் ஆகிய இரு முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வார்னர் ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு மேல் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார். முஸ்திவிசூர் ரஹ்மான், லுங்கி இங்கிடி ஆகியோர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
இதன் காரணமாக மும்பை அணிக்கெதிரான போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களுடன் டெல்லி அணி விளையாடி வெற்றி பெற்றது. இந்த சம்பவத்தில் கேப்டன் பண்ட் மீது தான் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாகவும்,விக்கெட் கீப்பராகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஏற்கனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீது நிதானம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள சஞ்சுவின் இந்த அதிரடி இந்திய அணிக்கு மாற்று விக்கெட் கீப்பர் கிடைத்துள்ளார் என்பதை சொல்லாமல் சொல்ல வைத்துள்ளது. இதனால் எதிர்கால கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.