ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் ரியான் பராக் - என்ன காரணம்?
நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டு வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் தோல்வியுற்று சென்னை அணியுடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
2021 ஐபிஎல் தொடர் முதல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது, சஞ்சு சாம்சன் தனது விரலில் காயம் அடைந்தார்.
அதன் பின்னர் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவரை விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட வேண்டாம் என பிசிசிஐ அறிவுறுத்தியது.
மீண்டும் கேப்டனாக சஞ்சு சாம்சன்
இதனையடுத்து, 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் விளையாடிய 3 போட்டிகளிலும், விக்கெட் கீப்பிங் செய்யாமல், ஒரு இம்பாக்ட் வீரராக பேட்டிங் செய்ய மட்டும் அணியில் இருந்தார்.
இந்நிலையில், தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க பெங்களூருவில் உள்ள என்சிஏவிற்கு(NCA) சஞ்சு சாம்சன் சென்றார்.
அங்கு, நடைபெற்ற சோதனையில், அவர் தேர்ச்சியடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், இனி வரும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.