"என்னை ஏன் டீம்ல எடுக்கல” - பிசிசிஐ கடுமையாக சாடிய சஞ்சு சாம்சன்

sanjusamson INDvNZ
By Petchi Avudaiappan Nov 11, 2021 06:17 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்து தொடரில் தன்னை புறக்கணித்த பிசிசிஐக்கு சஞ்சு சாம்சன் பதிலடி கொடுத்துள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேற, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும், கடைசி மற்றும் இறுதி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால் இந்த தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தவிர்த்து கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ள காரணமாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.இந்நிலையில் அதற்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் சஞ்சு சாம்சன். அவர் பவுண்டரி எல்லைகளில் மிக கடினமான கேட்ச்களை தாவி பிடித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், விக்கெட் கீப்பிங் மட்டுமல்ல, ஃபீல்டராகவும் சிறப்பாக இருப்பேன் என்பதை பாருங்கள் என மறைமுகமாக பிசிசிஐக்கு பதிலடி கொடுத்துள்ளார்.