சிஎஸ்கே அணிக்கு கேப்டனாகிறாரா இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்? - தோனி பதவிக்கு ஆப்பு!
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆர்வமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை அணி 4வது முறையாக கைப்பற்றி அசத்தியது.அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாடும் என்றும், வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை அணி கேப்டன் தோனியை தக்கவைக்க விரும்புவதாக தெரிவித்தது. ஆனால் தனக்கு வயதாகி விட்டதால் தன்னை ரூ.16 கோடி கொடுத்து தக்க வைக்க வேண்டாம் என்றும், ஏலத்தில் விடுமாறும் சென்னஈ அணி நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.
அதேசமயம் இந்த ஆண்டு அவர் விளையாடினாலும் நிச்சயம் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியில் இருக்க மாட்டார் என்ற தகவலும் உலா வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக தற்போது விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சென்னை அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை “அன் பாலோ” செய்த சஞ்சு சாம்சன் சென்னை அணியின் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் சென்னை அணியில் விளையாட விரும்புவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தோனிக்கு பின் அணியை அடுத்த பத்தாண்டுகளுக்கு விக்கெட் கீப்பர் கேப்டனாக அவரால் கொண்டு செல்ல முடியும் என்கிற காரணத்தினால் தற்போது தோனியின் இடத்தை சாம்சன் குறி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.