எதற்காக சஞ்சு சாம்சனை களத்தில் இறக்கவில்லை… - அதிருப்தியில் ரசிகர்கள் - ஹர்திக் பாண்டியா விளக்கம்
எதற்காக சஞ்சு சாம்சனை களத்தில் இறக்கவில்லை என்பது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுத்துள்ளார்.
டி20 உலக கிரிக்கெட் தொடர் -
ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
இந்த உலக கோப்பை T20 தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்டியாவும், ஒரு நாள் போட்டிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. அப்போது, தொடர் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது.
இதன் பின், 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
ஹர்திக் பாண்ட்டியா விளக்கம்
இத்தொடரில் இந்தியா வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் இருந்தது. காரணம், எந்த ஆர்டரிலும் அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அதேபோல், உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா பேசுகையில், வெளியில் எங்களைப் பற்றி பேசினால், அது அணியில் எங்களை யாரும் பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் நான் முடிவெடுக்கிறேன்.
வீரர்கள் மோசமாக உணர்ந்தால் என்னிடம் வந்து பேசலாம் அல்லது பயிற்சியாளரிடம் சென்று பேசலாம். நான் கேப்டனாக இருந்தால், அது ஒரு பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் எனது இயல்பு எல்லாரும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இருக்கிறது என்றார்.