அதிரடி காட்டிய சஞ்சு : ஹைதராபாத்துக்கு 165 ரன்கள் இலக்கு

IPL 2021 SunRisers Hyderabad SRH vs RR
By Irumporai Sep 27, 2021 04:21 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லீவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் லீவிஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் பாட்னர்ஷிப் கட்டமைத்தார். ஜெய்ஸ்வால் துரிதமாக ரன் சேர்த்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 50 ரன்களைக் கடந்தபோது சந்தீப் சர்மா பந்தில் சிக்ஸர் அடித்த ஜெய்ஸ்வால் அடுத்த பந்திலேயே போல்டானார்

. அவர் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டனும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்த 3 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. கடைசி ஓவரை வீசிய சித்தார்த் கௌல் 2-வது பந்தில் சாம்சனையும் (82 ரன்கள்), 3-வது பந்தில் ரியான் பராக்கையும் வீழ்த்தினார்.

4-வது பந்தில் லோம்ரர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அப்துல் சமத் தவறவிட்டதால், அந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கௌல் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.