என்னை யாரும் கடத்தவில்லை நடிகை சஞ்சனா கல்ராணி பரபரப்பு விளக்கம்

Actor Description Sanjjanaa Galrani
By Thahir Oct 07, 2021 05:42 AM GMT
Report

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்போது ஜாமீனில் இருக்கும் அவர், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூரு இந்திரா நகரில் இருந்து நேற்று முன்தினம் வாடகை காரில் ராஜ ராஜேஸ்வரி நகரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சஞ்சனா சென்றார்.

என்னை யாரும் கடத்தவில்லை  நடிகை சஞ்சனா கல்ராணி பரபரப்பு விளக்கம் | Sanjjanaa Galrani Actor Description

அப்போது காரில் ஏ.சி போடுவது தொடர்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. டிரைவர் சூசை மணி என்பவரை சஞ்சனா திட்டினாராம்.

இது தொடர்பாக சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார் டிரைவர். சஞ்சனா, தகாத வார்த்தையில் திட்டுவது தொடர் பான வீடியோ ஆதாரங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

இதுபரபரப்பானதை அடுத்து, நடிகை சஞ்சனா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரிநகருக்கு நான் வாடகை காரில் சென்றேன்.

அந்த நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக நினைத்து டிரைவரிடம் தகராறு செய்தேன்.

அவரை திட்டவில்லை. இந்த விவகாரத்தில் எனது தரப்பு நியாயத்தையும் போலீசாரிடம் தெரி விப்பேன். கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

நான் நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது என்றார். இது குறித்து கார் டிரைவர் சூசைமணி கூறும்போது, கொரோனா காரணமாக 3 பேரை தான் காரில் ஏற்ற வேண்டும்.

ஆனால் சஞ்சனாவுடன், மேலும் 3 பேர் ஏறினார்கள். கொரோனா காரணமாக காரில் ஏ.சி.யை குறைத்து வைத்திருந்தேன்.

அதிகரிக்கும்படி கூறி சஞ்சனா வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். அதனால் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். நான் சஞ்சனாவை கடத்தி செல்லவில்லை' என்றார்.