ஐபிஎல் தொடரில் மாஸ் காட்ட காத்திருக்கும் லக்னோ அணி - இதுதான் அவங்க பிளான்
ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் எதிர்கால திட்டம் குறித்து அதன் நிறுவனர் கோயிங்கா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ள நிலையில் வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.
இதில் லக்னோ அணி ரூ.20 கோடி கொடுத்தாவது பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் தனது அணியின் கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளது. அந்த அணி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவரை தனது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
மேலும் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பிரை நியமித்தது.. இதனிடையே தனது அணியில் அடுத்தடுத்து புதிய மாற்றங்களை அதிரடியாக அறிவிக்கும் லக்னோ அணியின் நிறுவனர் கோயிங்கா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அணியின் எதிர்கால திட்டம் குறித்த கருத்துகளை தெரிவித்தார்.
அதில் எனக்கு ஐபிஎல் தொடர் குறித்தான எந்த ஒரு விதியும் தெரியாது.ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணிதான் எனக்கு முன்னுதாரணமாக திகழும் அணியாகும். அந்த அணி செய்த சாதனை ஐபிஎல் தொடரில் மட்டுமில்லாமல் உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ் பிரான்சைஸாக திகழ்ந்து வருகிறது என கூறியுள்ளார். இதன்மூலம் மும்பை அணி போல் லக்னோ அணியும் வலிமையான வீரர்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.