ஏன் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்ன்னு தெரியுமா...? - ரகசியத்தை போட்டுடைத்த சஞ்சீவ்...!
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றி நடிகர் சஞ்சீவ் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
‘பீஸ்ட்’ திரைப்படம்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்தனர்.
‘வாரிசு’ திரைப்படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66வது படமான ‘வாரிசு’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் விஜய் பணியாற்றி வருகிறார்.
‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, தேர்தலில் வாக்களிக்க விஜய் சிவப்பு மற்றும் கருப்பு சைக்கிளில் வந்திருந்தார். அன்றைய சூழலில் நடிகர் விஜய் சைக்கிளிலில் வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தான் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார் என்றும், சிவப்பு மற்றும் கருப்பு சைக்கிளில் வந்து மறைமுகமாக ஒரு கட்சிக்கு விஜய் ஆதரவு தருகிறார் என்றும் சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
உண்மையை உடைத்த நடிகர் சஞ்சீவ்
நடிகர் விஜய் ஏன் சைக்கிளில் வந்தார் என்ற உண்மை காரணத்தை, நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சஞ்சீவ் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வெளியான செய்திகளை கேட்டு, நான் விஜய்க்கு போன் செய்தேன். என்ன விஜய்.. ஏன் சைக்கிளிலில் போனீங்க... என்று கேட்டேன்.
அதற்கு அவர், சஞ்சீவ்... வாக்களிக்கும் இடம் என் வீட்டு பக்கத்தில் இருக்கிறது. நான் காரில் சென்றால் சரியா இருக்காது... அப்படியே நான் காரில் சென்றாலும் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்... அதனால்தான் நான் சைக்கிளில் போனேன் என்று என்னிடம் கூறினார்.
இவ்வாறு பேட்டியில் நடிகர் சஞ்சீவ் பேசிய இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.