இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நடிகர் சஞ்சீவ் வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஏறக்குறைய இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் முதலில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ், டான்சர் அமீர் இருவரும் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்தனர்.
மறுபுறம் எவிக்ஷனில் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்க கடந்த வாரம் முதன் முதலாக இரட்டை எவிக்ஷன் நடந்து வருண், அக்ஷரா இருவரும் வெளியேறினர். இதனிடையே இந்த வார நாமினேஷன் பட்டியலில் நிரூப், தாமரை, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், ராஜு, சிபி, பாவனி என நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரும் இடம் பிடித்தனர்.
இவர்களில் அடுத்தடுத்த சவால்களைச் சிறப்பாக முடிக்கும் ஒருவர் ’டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க் மூலம் நேரடியாக பைனலுக்குள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதில் அமீர் முதல் ஆளாகத் தகுதி பெற்றார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களில் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்த சஞ்சீவ்,நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.
வழக்கம்போல் பணப்பெட்டி கொடுத்து அதை எடுப்பவர்கள் வெளியேறலாம் என்ற சலுகை இந்த முறையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் மேலும் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது.