சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் - ஜனாபதி ஒப்புதல்

President Approval Judge Transfer Sanjeeb Banerjee
By Thahir Nov 15, 2021 07:32 PM GMT
Report

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர்,

சென்னைஉயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில்,

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.