பெங்களூர் அணிக்கு திரும்ப வரும் டிவில்லியர்ஸ் - இந்த முறை கோப்பை இவங்களுக்கு தானா?

rcb viratkohli abdevilliers ipl2022
By Petchi Avudaiappan Dec 06, 2021 11:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ஏ.பி.டிவில்லியர்ஸ் மீண்டும் பெங்களூர் அணிக்கு திரும்பவுள்ளதாக முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்திய ரசிகர்களால் செல்லமாக மிஸ்டர் 360 டிகிரி என்றழைக்கப்படுபவர் தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமான டிவில்லியர்ஸ், கடந்த சீசனுடன் ஓய்வுப் பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். 

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்கு டிவில்லியர்ஸ் ஒரு தூண் என்றே கூறலாம். ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு சீசனிலும் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடத்தில் இவரின் பெயர்தான் இடம்பெற்றிருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை பார்த்து மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்புங்கள் என அழைப்பு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

கடந்த சீசனில் டிவில்லியர்ஸால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபார்ம் அவுட் என்பதை உணர்ந்த டிவில்லியர்ஸ் மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஓய்வு முடிவை அறிவித்து வெளியேறிவிட்டார். 

இதனையடுத்து பெங்களூரு அணி  விராட் கோலி (15 கோடி), க்ளென் மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்தது. இந்நிலையில் டிவில்லியர்ஸுக்கு மீண்டும் பெங்களூரு அணி நிர்வாகம் அழைப்பு விடுக்கும் இந்திய அணி முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு வீரராக இல்லாமல் அந்த அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என்றும், செயல்பட்டால் இளம் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்றும் தான் நினைப்பதாக சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.