கோலி மிகவும் பயந்துட்டாரு... அதுனால தான் இப்படி செஞ்சுருக்காரு... - கடுமையாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேகர்

cricket sports india team virat kohli resignation sanjay manjrekar talks fan sad
By Nandhini Jan 17, 2022 07:48 AM GMT
Report

கோலி பயந்ததன் காரணமாகத்தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த முடிவால் விராத் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், விராத் கோலியின் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேகர், விராத் கோலி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் - குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்து விட்டது.

முதலில் ஐபிஎல் பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, டி20, ஒருநாள் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார். களம் மாறிய பின்பு அதாவது ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பில் வெளியேறிய பின் அசௌகரியமாக உணர்ந்துள்ளார்.

ஏற்கனவே கும்ப்ளே உடன் மோதல் ஏற்பட்டதும் நினைவு கூறத்தக்கது. ராகுல் டிராவிட் ரவி சாஸ்திரி போல கிடையாது. விராத்தின் பார்மும் மோசமாக இருக்கிறது. இதனால் ஏதாவது ஒருவகையில் தன்னை யாரும் நீக்கமுடியாத கேப்டனாக காட்டிக்கொள்ளவே கோலி விரும்பியுள்ளார்.

தன்னுடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து வரும் என பய உணர்வு வந்தவுடனே டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார் என்று கூறியுள்ளார்.   

கோலி மிகவும் பயந்துட்டாரு... அதுனால தான் இப்படி செஞ்சுருக்காரு... - கடுமையாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேகர் | Sanjay Manjrekar Talks Virat Kohli Resignation