“அனைவரும் விரும்பும் நிறைய விஷயங்கள் கோலியிடம் இருக்கிறது, அணியை முன்மாதிரியாக வழிநடத்தும் ஒருவர் அவர்” - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
“கோலியைப் பார்க்கும்போது அவரைப் பற்றி விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஏனென்றால் அவர் முன்மாதிரியாக வழிநடத்தும் ஒருவர் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்,
“ஆல் டைம் ஜாம்பவான்கள் பற்றி பேசும்போது எம்.எஸ்.தோனியை கணக்கில் கொள்ளாமல் இருப்பது மிகவும் அநியாயம்.
உலக அளவில் தாழ்வு மனப்பான்மை இருந்த காலத்தில் கபில்தேவும், மேட்ச் பிக்சிங்குக்குப் பிறகு சவுரவ் கங்குலியும் இந்தியாவுக்கு வெளிநாட்டு வெற்றிகளைக் கொடுத்தனர்.
சுனில் கவாஸ்கரும் கூட. விராட் கோலியை விட இவர்களே சிறந்த கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். கேப்டனாக கோலி தனது காலத்தில் இந்திய அணிக்கு விரும்பிய முடிவுகளை கொண்டுவர முடியவில்லை.
நீங்கள் கோலியைப் பார்க்கும்போது அவரைப் பற்றி விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஏனென்றால் அவர் முன்மாதிரியாக வழிநடத்தும் ஒருவர்.
அவர் இந்தியாவின் மன உறுதியை உயர்வாக வைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
ஆனால் கடைசி நிமிடம் வரை இந்தியா ஆட்டத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது. ஆனால் இறுதியாக முடிவுகள் வரவில்லை” என தெரிவித்தார்.