பெங்களூர் அணிக்கு மீண்டும் வந்த நபர் - அடுத்த ஐபிஎல் கோப்பை அவங்களுக்கு தான்...!
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல தற்போதே முதற்கட்ட நடவடிக்கையை பெங்களுரு அணி எடுக்க தொடங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணி என அனைவராலும் கணிக்கப்பட்ட பெங்களூரு பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணியிடம் தோற்றனர்
இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்றுள்ள அந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரசிகர்கள் முதல் அணி நிர்வாகத்தினர் வர அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். எனினும் அந்த அணிக்காக தொடர்ந்து பேட்ஸ்மேனாக செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் மட்டுமல்லாமல் 2 புதிய அணிகளும் சேர்க்கப்படவுள்ளன. இதனால் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவியுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு அணிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரை தலைமை பயிற்சியாளராக நியமித்து அணி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டவர் சஞ்சய் பங்கர்.
மேலும் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அந்த அணி அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்க ராசியும் இருக்கா பாருங்க Manithan
