வேலூரில் பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான சூழலில் பணி செய்யும் தொழிலாளர்கள் - அதிகாரிகள் அலட்சியமா?
குடியாத்தம் நகராட்சியில் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய் தூர்வாருவது தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரிப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு தூய்மைப் பணிகளில் ஈடுபடுபவர்கள் போதுமான பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி தூய்மையை பணியாளர் ஒருவர் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கைகளாலேயே கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவுகளை எடுத்து கொட்டிம் பணியை செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது மேலும் இதுபோன்று பாதுகாப்பு கவசங்கள் ஏதுமில்லாமல் இதுபோன்ற துய்மை பணியில் ஈடுபடுத்த நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் பணி செய்வதால் பல்வேறு நேரங்களில் விஷவாயு தாக்கி உயிரழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்த பணிகளில் மனிதர்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.