சாணிகாயிதம் படப்பிடிப்பில் செல்வராகவனுடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

movie keerthi suresh sanikayitham
By Anupriyamkumaresan Jun 30, 2021 04:02 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன், முதல் முறையாக அருண் மாதேஸ்வரனின் சாணிகாயிதம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சாணிகாயிதம் படப்பிடிப்பில் செல்வராகவனுடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்! | Sanikayitham Film Shooting Start Keerthisuresh

கடந்த 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனையும் எழுதிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்பதால், சாணிக்காயிதம் படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

சமீபத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி புகைப்படங்கள் வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சாணிகாயிதம் படப்பிடிப்பில் செல்வராகவனுடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்! | Sanikayitham Film Shooting Start Keerthisuresh

தற்போது படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சாணிக்காயிதம் படத்தில் உற்சாகமுடன் இணைத்துள்ளார்.

காரில் ஷூட்டிங்கிற்கு செல்லும் புகைப்படத்தை மீண்டும் சாணிக்காயிதம் ஷூட்டிங் திரும்பியிருக்கிறேன் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.