‘இவ்வளவு கோபமான ஆண்கள் இருக்க மாட்டார்கள்...’ - சானியா மிர்சாவின் உருக்கமான பதிவு...!
‘இவ்வளவு கோபமான ஆண்கள் இருக்க மாட்டார்கள்...’ என்று விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் சானியா மிர்சா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சானியா மிர்சா - சோயப் மாலிக்
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாகவும், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்பட தெரிவித்தார்.
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இத்தகவலால் சானியா மிர்சாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.
சானியா மிர்சா பதிவு
சானியா மிர்சா சமீபத்தில் கத்தாரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஃபிஃபா உலகக் கோப்பையைப் பார்த்தார். தற்போது சானியா துபாயில் ஒரு புதிய டென்னிஸ் அகாடமியில் தன்னுடைய கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையல், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஒருவேளை கண்ணீருடன் இருக்கும் சிறு பையன்களுக்கு வெட்கப்படுவதற்குப் பதிலாக ஆறுதல் கூறப்பட்டால், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பச்சாதாபப்படவும் போராடும் கோபமான மனிதர்கள் பலர் இருக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.