கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா - உருக்கமான பேட்டி - வைரலாகும் வீடியோ...!

Tennis Viral Video
By Nandhini 1 மாதம் முன்

கண்ணீருடன் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளிலிருந்து கண்ணீருடன் சானியா மிர்சா விடைபெற்றார் .

சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி

சமீபத்தில் தனது டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிப்பை வெளியிட்டிருந்தார் சானியா மிர்சா.

இந்நிலையில், மெல்போர்னில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சானியா மிர்சா பங்கேற்று விளையாடினார்.

இவர் பங்கேற்கும் கடைசி தொடர் இதுதான். இப்போட்டியில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடினர்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்றிருந்த சானியா மிர்சாவின் கனவு தகர்ந்தது. இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார் சானியா மிர்சா...

sania-mirza-said-goodbye-with-tears-viral-video

கண்ணீருடன் ஓய்வு பெற்றார் சானியா மிர்சா -

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா கண்கலங்கி உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து சானியா மிர்சா பேசியதாவது -

அந்த பதிவில், 2005ம் ஆண்டில் 18 வயதில் இதே இடத்தில்தான் (மெல்போர்ன்) செரீனா வில்லியம்ஸ்க்கு எதிராக எனது ஆட்டத்தை தொடங்கினேன். இதே இடத்தில் மீண்டும், மீண்டும் வெற்றி பெற்றுள்ளேன் என்பது பெருமையாக உள்ளது.

எனது ஆட்டத்தை நிறைவு செய்ய இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. எனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியை, என் மகன் முன்பு விளையாடுவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என் பெற்றோர் முன்பு விளையாடியது மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார். 

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தை மறைத்து அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.