சானியா குடும்ப உறவில் விரிசல் : சோகத்தில் ரசிகர்கள்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சானியா சோயப் திருமணம்
இந்த தம்பதிகளுக்கு நான்கு வயது விரும்பிய இஷான் என்ற மகனும் உள்ளார் , இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோயப்பும் சானியாவும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் :
உறவில் விரிசல்
உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி என பதிவிட்டுள்ளார், அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்என்று கூறியிருந்தார்.ஆகவே இருவரின் உறவின் விரிசல் உள்ளதாக பலர் கூறினாலும், இருவரும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.