சனி கொடுக்குறத தடுக்க முடியுமா? சொந்த ராசிக்கு விஜயம் - ஓஹோனு வாழப்போகும் 3 ராசிகள்
சனீஸ்வரன் அருளால் 3 ராசிகள் நல்ல பலன்கலை பெறப்போகின்றனர்.
சனி பகவான் ஜூன் 07 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையவுள்ளார்.
இதனால் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியை பெறுவதோடு, நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். குறிப்பாக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் எதெல்லாம் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
கன்னி
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளை சற்று பொறுமையாகவும், அமைதியாகவும் கையாண்டால், உறவுகளில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.