பெயர் நீக்கம்; கணவருடன் விவாகரத்து? நடிகை சங்கீதா உறுதி!

Sangeetha Tamil Cinema Krish
By Sumathi Aug 07, 2025 01:19 PM GMT
Report

கிரிஷ் - சங்கீதா விவாகரத்து செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்து?

பிரபல நடிகையான சங்கீதா ‛பிதாமகன், உயிர், காளை' உள்ளிட்ட பல படங்கள் மூலம் கவனம் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறார்.

sangeetha - krish

இவர் பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டா தளத்தில் சங்கீதா தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயர் கிரிஷ் என்பதை நீக்கி சங்கீதா ஆக்டர் என மாற்றியதாக கூறப்படுகிறது.

மகள், மருமகன் முன்னிலையில்.. 51 வயதில் 2வது திருமணம் செய்த பிரபல நடிகை!

மகள், மருமகன் முன்னிலையில்.. 51 வயதில் 2வது திருமணம் செய்த பிரபல நடிகை!

சங்கீதா மறுப்பு

இதனை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் பிரியப்போவதாகவும், விவாகரத்து பெறப்போவதாகவும் கமெண்டுகளை குவித்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது இதற்கு பதிலளித்துள்ள சங்கீதா,

பெயர் நீக்கம்; கணவருடன் விவாகரத்து? நடிகை சங்கீதா உறுதி! | Sangeetha Singer Krish Divorce Romour

‛‛அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்தி முற்றிலும் தவறானது. கிரிஷ், திருவண்ணாமலை போய் விட்டு திரும்பி வந்து கொண்டுள்ளார். என்னிடம் பிரேம் கூட இதுபற்றி கேட்டார்.

அதெல்லாம் இல்லை என கூறினேன். பொதுவாக நான் என் பெயருக்கு பின்னால் என் அப்பாவோ அல்லது கணவர் பெயரை போட விரும்பமாட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.