விஜய் தரப்பில் மிரட்டுகின்றனர்: சங்கீதா புதிய மனு
விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்.
விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும்.

விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும்.

பலமுறை முயற்சித்தும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
