சிறுமி கொடுத்த பலாத்கார வழக்கு - கைதான நேபாள கிரிக்கெட் வீரருக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல்...!
சிறுமி கொடுத்த பலாத்கார வழக்கில் கைதான நேபாள கிரிக்கெட் வீரருக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சந்தீப் லமிச்சனே
நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்தான் சந்தீப் லமிச்சனே. இவர் 30 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாலியல் பலாத்காரம் புகார்
சமீபத்தில் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் போலீசிடம் பாலியல் பலாத்காரம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் எனக்கு அறிமுகமானார். இதனையடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டலில் என்னை அழைத்துக் கொண்டுச் சென்று சந்தீப் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பாக வீரர் சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவ பரிசோதனைகளும் நடந்தது.
பிடிவாரண்ட்
இதற்கிடையில், சந்தீப்க்கு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவித்தது.
சந்தீப் லமிச்சனே கைது
கடந்த மாதம் நேபாளத்திலிருந்து புறப்பட்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க சென்ற சந்தீப் கடந்த 6ம் தேதி காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, நேபாள போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து, அவரை போலீசார் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது காவல் நேற்றுடன் முடிந்தது. இதன் பின்பு, அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கூடுதல் போலீஸ் காவலுக்கு அனுமதி தர வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
5 நாட்கள் போலீஸ் காவல் நீடிப்பு
இந்நிலையில், காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் சந்தீப் லமிச்சானேவுக்கு கூடுதலாக 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.