ஊரடங்கில் மணல் திருட்டு - லாரி உரிமையாளரை கைது செய்த காவல்துறை
திருச்சுழி குண்டாற்றுப் பகுதியில் ஊரடங்கைப் பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி பறிமுதல் டிரைவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமிநத்தம் பகுதியில் திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குண்டாற்றுப் பகுதியில் ஒரு டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரான திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தவமணியை கைது செய்தனர்.
மேலும், லாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்த
திருச்சுழி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.