Get Well Soon - ரிஷப் பண்ட்டிற்கு ஒரிசாவில் மணல் சிற்பம்...- வைரலாகும் புகைப்படம்
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
நேற்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பண்ட். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரிஷப்பை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் பந்த்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமூகவலைத்தளங்களில் ரிஷப் விரைவில் குணமடைய வேண்டும் என்று உலக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரிஷப்பிற்கு ஒடிசாவில் மணல் சிற்பம்
இந்நிலையில், சுந்தர்சன் பட்நாயக் என்ற மணல் சிற்ப கலைஞர், கார் விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரிஷப் விரைந்து குணமடைய ஒடிசா கடற்கரையில் அவரின் உருவத்தை மணல் சிற்பமாக வடிவத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
The Sand art by Sundarsan Pattnaik for Rishabh Pant at Odisha. pic.twitter.com/7lHiR8Juww
— Johns. (@CricCrazyJohns) December 30, 2022
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
முல்லைத்தீவில் காயமடைந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்: ஆளுநருக்கு அவசரக் கடிதம் IBC Tamil
சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு' விருதை அர்ப்பணிகின்றேன்! நவநீதம் பிள்ளை நெகிழ்ச்சி IBC Tamil