படம் நடிக்க கூப்பிடலை; படுக்க தான் கூப்பிடுறாங்க - ஆவேசமான சனம் ஷெட்டி
பல பெரிய பிரபலங்கள் இதை ஆதரிப்பது அதிர்ச்சியாக உள்ளதாக சனம் ஷெட்டி பேசியுள்ளார்.
பெண்ணுரிமை
கூல் சுரேஷ், செந்தில் ஆகியோர் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை விழா ஒன்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பேட் கேர்ள் படத்தின் டீசர் தவறாக உள்ளது. தம் அடிப்பது, சரக்கடிப்பது, இஷ்டத்துக்கு செக்ஸ் வைத்துக் கொள்வது தான் பெண்ணுரிமை என்று தவறாக காட்ட கூடாது.
சம உரிமை
குறிப்பாக மைனர் பெண்கள் மீது அதனை திணிக்கும் இதுபோன்ற படங்களை ஆதரிக்க கூடாது இது சட்டப்படியும், மனசாட்சிபடியும் மருத்துவ ரீதியாகவும் தவறானது. பல பெரிய பிரபலங்கள் இதை ஆதரிப்பது அதிர்ச்சியாக உள்ளது. தம் அடிப்பேன், 10 பேருடன் படுப்பேன் என சொல்வதுதான் சம உரிமையா?
சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கேட்க வேண்டும். அது வழங்கப்படுகிறாதா? சினிமா துறையிலே அது இல்லை. நடிகர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறாதா? ஒரே அளவிலான வாய்ப்பு வழங்கப்படுகிறதா? படம் நடிக்க கூப்பிடுறாங்கனு பார்த்த படுக்கதான் கூப்பிடுறாங்க" என பேசினார்.