தமிழ் சினிமா துறையிலும் பாலியல் சீண்டல்; கொடூரமான சூழலில் இருந்து தப்பித்தேன் - சனம் ஷெட்டி
தமிழ் சினிமா துறையிலும் பாலியல் சீண்டல் உள்ளதாக சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சனம் ஷெட்டி
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டி தனியார் அமைப்புடன் இணைந்து 7 நாட்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார் நடிகை சனம் ஷெட்டி. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, "போராட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். இதற்கு கண்டிப்பாக நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பேச கஷ்டமாக உள்ளது.
நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமா துறை
கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. நேற்று கிருஷ்ணகிரியில் கூட 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வரே சம்பந்தப்பட்டு உள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இதை நான் வரவேற்கிறேன். அதே போல் பாலியல் தொல்லை தமிழ் சினிமா துறையிலும் கண்டிப்பாக நடக்கிறது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலேயே இதை நான் சொல்லியுள்ளேன். அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் படவாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலை "செருப்பால் அடிப்பேன் நாயே" என்று சொல்லி அப்பொழுதே ஆஃப் செய்துள்ளேன்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பட வாய்ப்பு வரும் என்றால் அந்த மாதிரி படமே உங்களுக்கு வேண்டாம். உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். அல்லது நீங்களே சொந்தமாக படத்தில் நடிக்கலாம். அதைத்தான் நான் யூட்யூபில் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கு வாரத்திற்கு 3 அழைப்புகள் அது போல் வரும்" என பேசியுள்ளார்.