10 பேருடன் படுப்பதா பெண்ணுரிமை? பகீர் கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்!

Tamil Cinema Bigg Boss Sanam Shetty
By Sumathi Feb 19, 2025 03:30 PM GMT
Report

பேட் கேர்ள் படன் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

சனம் ஷெட்டி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் நடைபெற்ற தனது பட பூஜை நிகழ்ச்சியில் வெற்றிமாறனின் பேட் கேர்ள் படம் குறித்து ஆவேசமாக பேசிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

sanam shetty

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ஏற்கனவே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏகப்பட்ட பாலியல் தொல்லை பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பேட் கேர்ள் படம் போல்டான படமில்லை. இதுவொரு பேட் எக்ஸாம்பிள் படம்.

சினிமாவில் நடிகைகளை படம் நடிக்க எங்க கூப்பிடுறாங்க, பலரும் படுக்கத்தான் கூப்பிடுறாங்க. இங்கே உள்ள இந்த மோசமான விஷயத்தை எல்லாம் முதலில் மாற்றாமல் தேவையில்லாமல் இளம் பெண்களை கெடுக்கும் விதத்தில் படங்களை எடுப்பது ஏன் என்று தெரியவில்லை.

பெண்ணுரிமை

அதை பல பெரிய பிரபலங்கள் ஆதரிப்பது தான் நிஜமாவே ஷாக்கிங்காக உள்ளது தம் அடிப்பது, சரக்கடிப்பது, இஷ்டத்துக்கு 10பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தான் பெண்ணுரிமை என்று தவறாக காட்ட முயற்சிப்பது எல்லாம் பெண்ணுரிமை கிடையாது. சுதந்திரத்தை தவறாக பெண்கள் பயன்படுத்தக் கூடாது.

10 பேருடன் படுப்பதா பெண்ணுரிமை? பகீர் கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்! | Sanam Shetty Opens Up About Casting Couch

அதுவும் குறிப்பாக மைனர் பெண்கள் மீது அதனை திணிக்கும் இதுபோன்ற படங்களை ஆதரிக்கவே கூடாது. இது சட்டப்படியும், மனசாட்சிபடியும் மருத்துவ ரீதியாகவும் தவறான ஒரு விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.