ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி
ஒரே பாரதம் உன்னத பாரதம் -யுவ சங்கமம் என்ற பெயரில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திரிபுரா மாநில கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர், அதில் பேசிய தமிழக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார் அப்போது பேசிய ஆளுநர் 2047ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் மத்தியில் இந்தியா உன்னத நிலையை எட்டுவதற்கு, இந்தியாவின் எழுச்சிக்காகவும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதியான கோட்பாடு மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், நாட்டுப்புற கலைகள் மற்றும் கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது எனவும், நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அந்த ஒற்றுமையால் தான், கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம்.
ஒன்றுபட்டு கிடந்த நமது ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் நமது கலாசார-நாகரிக துண்டிப்பு தான் எனவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
சனாதன கொள்கைகள்
மேலும், நமது மாநிலங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. ஆனாலும் பாரதம் எனும் ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களையும், தாய் மண்ணையும் இரு கண்களாகவே பார்க்கிறார்.
நம் நாட்டை பற்றி உலக நாடுகளின் பார்வை தற்போது வெகுவாக மாறிவிட்டது. என்றும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது தேசம் வளரும் எனக் கூறினார்.