Monday, Jun 2, 2025

கர்ப்பமாக இருக்கும் மனைவியை இழுத்துச்சென்ற கணவர் - சிம்பு பட நடிகை விளக்கம்

Indian Actress
By Sumathi 2 years ago
Report

கணவர் இழுத்துச் சென்றது குறித்து நடிகை சனா கான் விளக்கமளித்துள்ளார்.

சனா கான்

நடிகை சனா கான் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அவரது கணவர் அவரது கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது. தமிழில், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு உட்பட சில படங்களில் நடித்தவர் சனா கான்.

கர்ப்பமாக இருக்கும் மனைவியை இழுத்துச்சென்ற கணவர் - சிம்பு பட நடிகை விளக்கம் | Sana Khan Explain About His Husband

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிரபலமானார். 2020ம் ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முப்தி அனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

விளக்கம்

இந்நிலையில், வைரலான வீடியோ சர்ச்சையான நிலையில் சனா கான் விளக்கமளித்துள்ளார். அதில், “இப்போதுதான் இந்த வீடியோ என் கவனத்துக்கு வந்தது. எங்கள் கார் ஓட்டுநரை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கர்ப்பமாக இருக்கும் மனைவியை இழுத்துச்சென்ற கணவர் - சிம்பு பட நடிகை விளக்கம் | Sana Khan Explain About His Husband

எனக்கு வியர்த்துக் கொட்டியதால், என் கணவர் விரைவாக காருக்கு அழைத்துச் சென்றார். மற்றபடி அதை தவறாக நினைக்க வேண்டாம். என் மீது காட்டிய அக்கறைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.