ஆபாச வீடியோவை காட்டி எனக்கு இந்த மாதிரி பண்ணுன்னு சொல்லுவார் என் கணவர் - நடிகை சம்யுக்தா

Tamil Cinema Tamil Actress Samyutha
By Thahir Jun 01, 2023 07:07 AM GMT
Report

நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் தனக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காட்டி டார்ச்சர் செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சம்யுக்தாவை டார்ச்சர் செய்த கணவர்

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனைகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இருவரும் மாறி மாறி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சம்யுக்தா தனது கணவர் பற்றி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

samyutha husband-gave-her-sex-torture

சம்யுக்தா திருமணத்திற்கு பிறகு தினமும் விஷ்ணுகாந்த் தன்னைச் செக்ஸ் டார்ச்சர் செய்து துன்புறுத்தி இருக்கிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

என்னை ரொம்ப கஷ்டப்படுத்தினார்

மேலும் தான் காதலிக்கும் போது விஷ்ணுகாந்த் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தது போன்று தான் இருந்தார். நானும் அதே போல தானே இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டேன்.

பின்னர் போக போக தான் புரிந்து கொண்டேன் ஆனாலும் அவர் என்னை காதலிக்கிறார் அதனால் தான் என்னை இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவர் என்னை ரொம்ப மோசமாகத்தான் நடந்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார். ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார்.

எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார். நான் அதற்கும் சம்மதிக்கவில்லை.

உடலுறவு நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார்.அது கோபமான அடியாக இல்லாவிட்டாலும் என எனக்கு ரொம்ப வலிக்கும். எனக்கு வலிக்கிற மாதிரி தான் அடிப்பாரு.

நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்.

என்னால் 15 நாட்கள் கூட அந்த வீட்டில் அவரோடு எனக்கு பிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு கஷ்டம் கொடுத்திருக்கிறார்.

கண் கலங்கிய சம்யுக்தா

எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். ஆனாலும் அன்னைக்கு கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.

எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்து அடுத்த நாளில் இரண்டு நாட்களுக்கு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அந்த அளவிற்கு கடுமையாக தான் நடந்து கொண்டார்.

காய்ச்சல் நேரத்திலும் என்னுடைய வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்த உண்மையை நான் சொல்லி விடுவேன் என்று தான் என் பாஸ்ட் லைப் எல்லாம் இப்போ அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சம்யுக்தா கண்கலங்கியபடி கூறியிருக்கிறார்.