காசு இருக்குன்னு இப்படி செய்யலாமா? - பிக்பாஸ் போட்டியாளரை கழுவி ஊற்றிய இணையவாசிகள்
பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென பல ரசிகர்களைப் பெற்றவர் முன்னணி மாடல் சம்யுக்தா அந்நிகழ்ச்சியில் சக போட்டியாளரான நடிகர் ஆரியின் வளர்ப்பு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சின்னத்திரை, வெள்ளித்திரை என சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஊரடங்கில் யூடியூப்பில் சொந்தமாக யூடியூப் சேனலை தொடங்கிய சம்யுக்தா அதில் குக்கிங், மேக்கப், டிராவல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சம்யுக்தா எலைட் லைஃப் வாழ கூடியவர் என்பது அவரின் வீடு, உடை மற்றும் அவரின் வருமானம் குறித்து வெளியான தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட உணவு குறித்த வீடியோ சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் கேரளாவை சேர்ந்த சம்யுக்தா அவரின் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். அப்போது தான் திருவனந்தபுரத்தில் இருக்கும் உலக புகழ்ப்பெற்ற, பல விருதுகளை சொந்தமாக்கிய பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு மதிய உணவு சாப்பிட சென்றார்.
அந்த ஹோட்டலை சுற்றி காட்டியப்படி அவர் அங்கு இருக்கும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதை ஒருபக்கம் வீடியோவாகவும் ஷூட் செய்து கொண்டிருந்தார்.எல்லா உணவுகளையும் ருசி பார்த்த பின்பு அதற்கான பில்லையும் அவர் கொடுத்தார். மொத்தம் ரூ. 5000 என பில்லையும் காட்ட இணையவாசிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்த பணத்தை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்றும், ரூ. 5000 இருந்தால் நாங்கள் 2 மாசத்துக்கு சாப்பிடுவோம் என்றும் சரமாரியாக கருத்துகளை பதிவிட தொடங்க இன்னும் சிலரோ சம்யுக்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.