4 வருசமா இன்னொரு உறவில் இருந்த கணவர்...பையன் அப்பா பத்தி கேக்கும் போதெல்லாம் - சம்யுக்தா வேதனை
நடிகை சம்யுக்தா தன்னுடைய வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
சம்யுக்தா ஷான்
பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஷான்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரை பற்றி பேசி அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். மாடல் ஷோக்களில் கலக்கி வரும் அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, வெள்ளித்திரையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமையத்துவங்கின.
'துக்ளக் தர்பார்', வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா, தற்போதும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். தனது கசப்பான வாழக்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
அந்த பேட்டியில், கொரோனா காலக்கட்டத்தில் போது தான் தன் கணவர் துபாயில் மற்றொரு பெண்ணுடன் 4 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது என கூறிய அவர், இதைக்கேட்ட தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறி அப்போது பயணமும் செய்யமுடியாது என்பதால் தான் உடைந்து போயிருந்தேன் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
உடைந்து போனேன்
அப்போதுதான் பாவானாவை சந்திக்க, தான் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டி விட்டேன் என்றும் ஆறுதல் கூறியது மட்டுமின்றி, தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பரிந்துரை செய்தவர் பாவனா தான் என்றார். இன்னும் அந்த பிரிவில் இருந்து, தான் வெளியே வரவே இல்லை என வேதனையுடன் கூறிய சம்யுக்தா, ஆனாலும் தான் அவருக்காக காத்திருக்கவில்லை என்று கூறி ஆனால் அந்த விஷயத்தில் தான் உடைந்து போயிருப்பதாக தெரிவித்தார்.
தன் மகன் அப்பா பற்றி கேட்கும் போது, அப்பா துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கூறி அவரால் இப்போது வரமுடியாது என்று சொல்வேன் என்றும் விவாகரத்து செய்து பிரிந்து விடலாம் என்று நினைத்தால், அவர் இங்கே வர மறுக்கிறார், அதனால் சிக்கிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.