நானும் சென்சார் போர்டு லஞ்சம் கொடுத்தேன்...வருத்தத்துடன் சொன்ன சமுத்திரக்கனி
அரசு சான்றிதழ் வாங்க பணம் கொடுத்ததாக நடிகர் விஷாலை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி செய்தியாளர் தெரிவித்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
விஷால் புகார்
நடிகர் விஷால் தன் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் சென்சராக மும்பையில் சென்சார் அதிகரிகளிடத்தில் 6 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இவரின் இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்ட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்வாறு யார் மீதும் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
சமுத்திரக்கனி பகிர்
இந்நிலையில், தான் அண்மையில் நிலா சோறு என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஷால் அளித்த புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தான் இது வரையில் 5 படங்களை தயாரிப்பதிருப்பதாக கூறி, தான் இது வரை அவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை என தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் தான் இயக்கி வெளியிட்ட அப்பா திரைப்படத்திற்கு tax free சான்றிதழ் பெற தானும் பணம் அளித்ததாக கூறிய சமுத்திரக்கனி, இது பெரும் வருத்தத்தை தனக்கு கொடுத்தாக தெரிவித்தார்