கடலூரில் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவன் - குவியும் பாராட்டு
samugam-wishes-student
By Nandhini
கடலூர் மாவட்டத்தில் தவற விட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு காவல் துறையினர் பாராட்டை தெரிவித்தனர்.
பெரியப்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவற விட்ட 16 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்ட பள்ளி மாணவன் சந்துரு, அப்பணத்தை புதுசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த நல்ல செயலை செய்ததற்காக, பள்ளி மாணவனுக்கு காவல் துறையினரும், அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.