பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுப்பு - கடைக்கு சீல் வைப்பு
பட்டியலின் சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்க மறுப்பு தெரிவித்த கடை உரிமையாளரின் வீடியோ வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் என்ற கிராமத்தில் தலித் சிறுவர்கள் அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க சென்றுள்ளனர்.
அப்போது கடை உரிமையாளர் மகேஸ்வரன் , அந்தச் சிறுவர், சிறுமிகளிடம் ஊர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிமேல் யாரும் தின்பண்டம் வாங்க வரக்கூடாது. இதை உங்கள் வீட்டில் போய் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து தீண்டாமையை அரங்கேற்றி ஒரு தரப்பை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கடைக்கு சீல் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்னடா கட்டுப்பாடு உங்களுக்கு கடைக்கு வந்த குழந்தைகள விரட்டற அளவுக்கு….??
— MooknayakDr (@sathisshzdoc) September 16, 2022
தென்காசி,சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு தீண்டாமை....
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/CcSWNoS35v