மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து வந்த ரயில் - ஒரு நொடியில் நாய்யின் உயிரை காப்பாற்றிய மனிதர் - பதற வைத்த வீடியோ
samugam-viral-video-dog-train
By Nandhini
ரயில் தண்டவாளத்தில் ஒரு மனிதர் விரைந்து ஓடி வருகிறார். பின்னால் மின்னல் வேகத்தில் ரயில் ஒன்று சீறி பாய்ந்து வந்துக்கொண்டிருந்தது. அந்த மனிதர் எதற்காக ஓடி வருகிறார் என்று பார்க்கையில், தண்டவாளத்தில் ஒரு நாய்யின் சங்கிலி மாட்டிக்கொண்டுள்ளது.
அதனால், தண்டவாளத்தில் அந்த நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் நின்றுக் கொண்டிருந்தது. பிறகு, ஒரு நொடியில் அந்த மனிதர் ஓடி வந்து மாட்டிக்கொண்டிருந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து பட்டென்று நாயின் உயிரை காப்பாற்றுகிறார்.
தன் உயிரையும் பார்க்காமல், ஒரு நாய்யின் உயிரை காப்பாற்றிய அவருக்கு சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -