Tuesday, Apr 8, 2025

இந்த மனசு தான் சார் கடவுள்.. படிக்கெட் ஏற முடியாத கர்ப்பிணி பெண்ணுக்கு கிடைத்த உதவி - வைரல் வீடியோ

samugam-viral-video
By Nandhini 3 years ago
Report

ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய துணி மணிகளை கையில் எடுத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்வதற்காக படிக்கெட்டில் ஏறுகிறார். ஆனால், அவரால் படிக்கெட்டில் ஏற முடியவில்லை. 

அந்த படிக்கட்டில் பலர் விறுவிறுவென்று சென்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த கர்ப்பிணி பெண்ணால் நடக்க முடியாமல் அங்கேயே நிற்கிறார். அப்போது சிலரிடம் உதவி கேட்கிறார். ஆனால், அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. 

அப்போது அங்கே வந்த ராணுவ வீரர்கள் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை பார்த்து நிற்கிறார்கள். அப்பெண்ணிடம் சென்று விசாரிக்கின்றனர். 

அப்போது அந்த கர்ப்பிணி பெண் அவர்களிடம் உதவி கேட்கிறார். இதனையடுத்து அந்த ராணுவ வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்...