பட்டம் விட்ட இளைஞரை தூக்கிச் சென்ற பட்டம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
இலங்கையில் இளைஞர் பட்டாளம் நடத்திய பட்டம் விடும் விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது. இலங்கையில் பட்டம் பறக்கவிட்ட நபர் ஒருவர் வான் நோக்கி தூக்கிச் செல்லப்பட்டது அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பருத்தித்துறை-புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்க விட்டுள்ளனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்தபோது, கயிறை பிடித்த இளைஞரும் எதிர்பாராத விதமாக மேலே தூக்கிச் செல்லப்பட்டார்.
அருகில் இருந்த மற்ற இளைஞர்கள் கீழே குதிக்குமாறு அந்த இளைஞரை நோக்கி கூச்சல் போட்டனர். அப்போது சுமார் 40 அடி உயரம் வரை அந்த இளைஞர் பறந்தார். பிறகு, சில நிமிடங்களுக்கு பிறகு பட்டம் சற்று கீழே இறங்கியதும், அந்த நபர் கீழே குதித்தார். அப்போது, அவருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.