‘உனக்கு மட்டும் தில்லு இருந்தா... கொரோனா ஊசி போடு பாப்போம்...’ - மிரட்டியவரின் வைரல் வீடியோ

samugam-viral-video
By Nandhini Dec 20, 2021 09:32 AM GMT
Report

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் தடுப்புப் பணிகளை மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

ஆரம்பத்தில் கொரோனா ஊசி போட அச்சம் அடைந்தவர்கள்... அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தானாக முன் வந்து ஊசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். 

தற்போது ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொருவரும் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே சினிமா தியேட்டர்கள், வேலை பார்க்கும் அலுவலகங்களில் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களை திட்டி, அனுப்புள்ளார் ஒருவர். தற்போது அவர் திட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.