பள்ளி மாணவனை சரமாரியாக அடித்து உதைத்த ஆசிரியர் - பதற வைக்கும் வீடியோ காட்சி

samugam-viral-video
By Nandhini Oct 14, 2021 06:26 AM GMT
Report

பள்ளி மாணவனை  ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சஞ்சய், அஜய் குமார், நெக்ஸா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு உள்ளிட்டோரை அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன்.

தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை என கேட்டு ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த கம்பால் மற்றும் காலால் உதைத்துள்ளார்.

இழிவாக பேசி மோசமாக அடித்திருக்கிறார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை டேக் செய்து பதிவிட்டார்.

தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.