ரயில் முன்பு தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண் - ஒரு நொடியில் உயிரை காப்பாற்றிய டிரைவர் - வைரல் வீடியோ
samugam-viral-video
By Nandhini
தண்டவாளத்தில் தடுப்பு கம்பியின் முன்பு வாகனங்கள் தண்டவாளத்தை கடக்க காத்துக் கொண்டிருந்தன. அப்போது, வாகனத்தில் அருகில் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள். அப்போது மின்னல் வேகத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. ரயில் அருகில் வந்தவுடன், அப்பெண் தண்டவாள தடுப்பு கம்பியின் இடையே நுழைந்து மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன்பு தற்கொலை செய்து கொள்வதற்காக நின்றாள். இதை சட்டென பார்த்த டிரைவர் ஓடிச் சென்று அப்பெண்ணை இழுத்து உயிரை காப்பாற்றினார்.
அப்போது வாகனத்தில் இறங்கி வந்த மக்கள் அப்பெண்ணை சமாதானப்படுத்தினார்கள். அப்போது அப்பெண் அழுதாள். அப்பெண்ணிற்கு மக்கள் ஆறுதல் கூறும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ -