திடீரென்று தெருவில் பாம்பாக மாறிய இளைஞன்! வீடியோ வைரல்

samugam-viral-video
By Nandhini Sep 23, 2021 08:05 AM GMT
Report

தெருவில் திடீரென்று ஒரு இளைஞன் நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மட்டக்களப்பு நகரின் மத்தியில் காந்தி சதுக்கத்திற்கு அருகில் ஒரு இளைஞன் பாம்பு போன்று படமெடுத்து, ஊர்ந்து சென்றது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆட்டோ ஓட்டுநரான இவர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று இப்படியாக நடந்துகொண்டாக அங்கிருந்தவர்கள் கூறினர். 

ஆட்டோவை விட்டுவிட்டு வெளியே குதித்து பாம்புபோன்று செயற்படத்தொடங்கியதாகவும், சுமார் 1 மணி நேரம் வரை அவர் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

சிலர், இந் இளைஞனுக்கு 'தெய்வம் வந்துவிட்டது' என்றும்,  'யாரே மாந்திரீகம் செய்துவிட்டார்கள்' என்றும், 'பேய் பிடித்துவிட்டதன் விளைவு' என்று கூறினர். 

இதோ அந்த வைரல் வீடியோ -