ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கப்பட்ட அப்பா - மகன் - அதிர்ச்சி வீடியோ வைரல்

samugam-viral-video
By Nandhini Sep 13, 2021 05:00 AM GMT
Report

டெல்லி, என்சிஆர் பகுதியான நொய்டா, செக்டர் 100ல் அமைந்துள்ள ஹைரைஸ் லோட்டஸ் பவுல்வர்ட் (Lotus Boulevard) சொசைட்டியில் வசிப்பவருக்கும், அங்கு பாதுகாவலராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது.

இந்த பிரச்சினை வாக்குவாதமாக மாறியது. இதனையடுத்து, அங்கு வந்த பத்து, பதினைந்து பாதுகாவலர்களால் குடியிருப்பாளரை கொடூரமாக தாக்கினர். தாக்குதலுக்கு உள்ளன சுரேஷ் குமார் என்ற நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள அறையின் சாவியை கொண்டு வருமாறு சுரேஷ் குமார் ஒரு செக்யூரிட்டி பணியாளரிடம் கேட்டிருக்கிறார். சாவி கொடுக்க முடியாது. இந்த மின் மீட்டர்கள் அறையில் செல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை என செக்யூரிட்டி கூறினார்.

இதனையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புவாசியான ​​குமார் செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. செக்யூரிட்டி பணியாளரை அறைந்ததால், அவருடன் சுமார் 10 செக்யூரிட்டி பணியாளர்கள் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்புவாசி குமாரை தாக்கியதாக போலீஸ் அதிகாரி கூறினார்.